மூக்குத்தி அம்மனாக நயன்தாரா… இரண்டாம் பாகத்தின் முதல் லுக் போஸ்டர் ரிலீஸ்!

vinoth

வியாழன், 2 அக்டோபர் 2025 (14:26 IST)
சில ஆண்டுகள் முன்னர் ரிலிஸான மூக்குத்தி அம்மன் படம் ரசிகர்கள் மத்தியில்  மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. இந்த படத்தில் நயன்தாரா மூக்குத்தி அம்மனாகவும், ஆர் ஜே பாலாஜி மற்றும் ஊர்வசி உள்ளிட்டோர் மற்ற கதாபாத்திரங்களிலும் நடித்திருந்தனர். ஆர் ஜே பாலாஜியுடன் இணைந்து என் ஜி சரவணன் இயக்கியிருந்தார்.

இதையடுத்து தற்போது அதன் இரண்டாம் பாகம்  உருவாகிறது. வேல்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் நயன்தாராவை வைத்து இரண்டாம் பாகத்தை உருவாக்க, இயக்குனராக சுந்தர் சி ஒப்பந்தமாகியுள்ளார். சுந்தர் சி இயக்குனர் பொறுப்பை ஏற்றுள்ளதால் படத்தின் கமர்ஷியல் மதிப்பு உயர்ந்துள்ளது. இதனால் படத்தின் பட்ஜெட்டும் அதிகமாகியுள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் ஷூட்டிங், பிரம்மாண்டமான பூஜையோடு தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இன்று ஆயுதபூஜையை முன்னிட்டு இந்த படத்தின் முதல் லுக் போஸ்டரைப் படக்குழு வெளியிட்டுள்ளது. தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மூன்று மொழிகளில் இந்த படத்தின் வெளியாகியுள்ளதால் படம் மூன்று மொழிகளிலும் ரிலீஸாகும் என்பது உறுதியாகியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்