இயக்குனர் கோபி நயினார் பேர் இல்லாமல் வெளியான ‘கருப்பர் நகரம்’ போஸ்டர்!

vinoth

புதன், 1 அக்டோபர் 2025 (10:54 IST)
நடிகை நயன்தாரா நடிப்பில், கோபி நயினார் இயக்கத்தில் வெளியான படம் அறம். இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. வர்த்தக ரீதியாகவும் நல்ல வசூலை பார்த்தது. ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த குழந்தையை, கலெக்டரான நயன்தாரா காப்பாற்றப் போராடுவதுதான் படத்தின் கதை.

இதையடுத்து ஜெய்யை வைத்து  கருப்பர் நகரம் என்ற படத்தை சில ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கினார். ஆனால் அந்த படம் என்ன ஆனது என்பதே யாருக்கும் தெரியாமல் இருந்தது. இப்போது ஆண்ட்ரியாவை வைத்து மனுஷி என்ற படத்தை இயக்கி வருகிறார். அதை இயக்குனர் வெற்றிமாறன் தயாரிக்கிறார்.

இதற்கிடையில் ‘கருப்பர் நகரம்’ படத்தில் இருந்து தான் விலகிவிட்டதாக கோபி நயினார் சில மாதங்களுக்கு முன்னர் அறிவித்தார். இந்நிலையில் இன்று ஆயுத பூஜையை முன்னிட்டு ‘கருப்பர் நகரம்’ படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது. அதில் இயக்குனர் பெயர் இல்லாமல் நடிகர், நடிகைகள் மற்றும் தயாரிப்பாளரின் பெயர் மட்டுமே இடம்பெற்றுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்