கமல்ஹாசன் மற்றும் பல முன்னணி நடிகர்கள் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ரிலீஸான இந்தியன் 2 திரைப்படம் படுமோசமான விமர்சனங்களை சந்தித்துள்ளது. இதுவரை ஷங்கர் கேரியரில் இல்லாத அளவுக்கு மோசமான வசூலையும் பெற்று வருகிறது.
மோசமான விமர்சனங்களாலும், கேலிகளாலும் படத்தில் இருந்து 12 நிமிட நேரத்தைக் குறைத்தனர். ஆனால் அப்போதும் அந்த படம் ரசிகர்களை தியேட்டருக்குள் ஈர்க்கவில்லை. இந்நிலையில் இந்தியன் 3 மீது ரசிகர்களுக்கு இருந்த எதிர்பார்ப்பு அப்படியே படுத்துவிட்டது.
இதனால் இந்தியன் 3 படத்தை நேரடியாக ஓடிடியில் ரிலீஸ் செய்ய பேச்சுவார்த்தை நடத்தியது லைகா புரொடக்ஷன் நிறுவனம். ஆனால் அதற்கு இயக்குனர் ஷங்கர் மற்றும் நடிகர் கமல்ஹாசன் ஆகியோர் ஒத்துக் கொள்ளவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது. மீண்டும் சில காட்சிகளை ஷூட் செய்து படத்தை தியேட்டரில்தான் வெளியிடவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்களாம்.