இதையடுத்து அவரின் அடுத்த படமாக மாமன் மே 16 ஆம் தேதி ரிலீஸானது. இந்த படத்தை பிரசாந்த் பாண்டியராஜ் இயக்க சூரியுடன் ஐஸ்வர்யா லஷ்மி, பாபா பாஸ்கர், ராஜ்கிரண் மற்றும் லப்பர் பந்து புகழ் ஸ்வாஸிகா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். தாய்மாமன் உறவை மையப்படுத்தி நெஞ்சைக் கசக்கி பிழியும் படமாக மாமன் இருந்தது. இந்த படம் சென்னையைத் தாண்டி நகர்ப்புற மற்றும் கிராமப்புற பகுதிகளில் நல்ல வரவேற்பைப் பெற்றது.
திரையரங்குகளில் வெளியாகி இரண்டு மாதங்களாகியும் இன்னும் இந்த படம் ஓடிடியில் வெளியாகவில்லை. இந்நிலையில் ஜூலை இறுதியில் ஜி 5 தளத்திலும் ஜி தமிழ் தொலைக்காட்சியிலும் ஒரே நேரத்தில் வெளியாகும் என சொல்லப்பட்டது. ஆனால் இப்போது ஜி 5 தளத்தில் வரும் ஆகஸ்ட் 8 ஆம் தேதி ஸ்ட்ரீம் ஆகவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.