மீண்டும் ஒரு ரீமேக் படத்தில் பிரசாந்த்… கதாநாயகியாக தேவயானி மகள் அறிமுகம்!

vinoth

செவ்வாய், 29 ஜூலை 2025 (09:52 IST)
சில மாதங்களுக்கு முன்னர் தெலுங்கு சினிமாவில் மிகப்பெரிய வெற்றியைப் படமாக அமைந்தது ‘கோர்ட் ஸ்டேட் vs நோபடி’. இந்த படத்தில் தெலுங்கு நடிகர் பிரியதர்ஷி நடித்திருந்தார். மற்ற கதாபாத்திரங்களில் பெரும்பாலும் புதுமுகங்கள் நடிக்க படத்தை ராம் ஜெகதீஷ் இயக்கி இருந்தார். இந்த படம் கிட்டத்தட்ட 50 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் ஈட்டியது.

இந்நிலையில் இந்த படத்தின் ரீமேக் உரிமையை பிரபல நடிகரும் தயாரிப்பாளருமான தியாகராஜன் கைப்பற்றியுள்ளார். இப்போது அதன் ரீமேக்கில் பிரியதர்ஷி நடித்த வேடத்தில் பிரசாந்த் நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் சாய்குமார் நடித்த முக்கியக் கதாபாத்திரத்தில் தியாகராஜன் நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்த படத்தில் கதாநாயகர்களாக நடிக்க தேவயானியின் மகள் இனியா மற்றும் தயாரிப்பாளர் பைவ் ஸ்டார் கதிரேசனின் மகன் க்ருத்திக் ஆகியோர் அறிமுகமாகவுள்ளனர். இந்த படத்தை பிரசாந்த் மற்றும் பைவ் ஸ்டார் கதிரேசன் ஆகிய இருவரும் இணைந்து தயாரிக்கவுள்ளனர்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்