சிம்பு- வெற்றிமாறன் படத்தில் இருந்து வெளியேறினாரா தயாரிப்பாளர் தாணு?

vinoth

செவ்வாய், 29 ஜூலை 2025 (09:46 IST)
சூர்யா மற்றும் வெற்றிமாறன் இணைய இருந்த ‘வாடிவாசல்’ திரைப்படம் தற்காலிகமாக கிடப்பில் போடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  வெற்றிமாறனின் நீண்டகால படமாக்கல் பாணியால் சூர்யா ‘வாடிவாசல்’ படத்தைத் தற்காலிகமாக கிடப்பில் போட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் ஒரு படம் உடனடியாக உருவாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படம் ஒரு கேங்ஸ்டர் கதையாக உருவாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இந்த படத்துக்கும் ‘வடசென்னை ‘ படத்துக்கும் தொடர்பு இருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த படத்துக்கான ஒரு ப்ரமோஷன் காட்சியை சமீபத்தில் வெற்றிமாறன் படமாக்கினார். ஆனால் இதுவரை அந்த ப்ரோமோ வெளியாகவில்லை. இதற்கிடையில் இந்த படம் கைவிடப்பட்டுவிட்டதாக ஒரு தகவல் பரவி வருகிறது. அதே போல இந்த படத்தைத் தயாரிக்கும் பொறுப்பில் இருந்து தயாரிப்பாளர் தாணு விலகிவிட்டதாக சொல்லப்படுகிறது. ஏனென்றால் சிம்பு அதிக சம்பளம் கேட்பதாலும் படத்தின் பட்ஜெட் எகிறியதாலும் என சொல்லப்படுகிறது. இதனால் இந்த படத்தைத் தயாரிக்க ‘சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்’ நிறுவனத்திடம் சிம்பு பேச்சுவார்த்தை நடத்துவதாக சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்