இசையமைப்பாளராக அறிமுகம் ஆகும் மிஷ்கின்… டெவில் படத்தின் முக்கிய அப்டேட்!

Webdunia
வெள்ளி, 14 அக்டோபர் 2022 (09:58 IST)
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான மிஷ்கின் இப்போது பிசாசு 2 படத்தை இயக்கி வருகிறார். மிஷ்கினின் படங்களில் எப்போதும் பின்னணி இசையும் பாடல்களும் பேசுபொருளாக இருக்கும். அது இளையராஜா இசை அமைத்ததாக இருந்தாலும், அறிமுக இசையமைப்பாளராக இருந்தாலும் சரி. அந்த அளவுக்கு இசையில் ஈடுபாடு கொண்டவர் மிஷ்கின். இந்நிலையில் அவர், தனது தம்பி அதித்யா இயக்கும் புதிய படத்துக்கு இசையமைப்பாளராக பணியாற்ற உள்ளார்.

இந்த படத்துக்கு ‘டெவில்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. மேலும் ஜூன் மாதம் தொடங்கிய படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது..  இந்த படத்தை மாருதி பிலிம்ஸ் சார்பாக தயாரிப்பாளர் R.ராதாகிருஷ்ணன் தயாரிக்கிறார். இப்படத்தில் விதார்த், பூர்ணா மற்றும் ஆதித் அருண் நடிக்கின்றனர். முக்கிய வேடத்தில் இயக்குனர் மிஷ்கின் நடிக்கின்றார். படப்பிடிப்பு முடிந்ததை அடுத்து படக்குழுவினர் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்