BSNL வாடிக்கையாளர்களே… இரு புதிய ரீசார்ஜ் திட்டங்கள் அறிமுகம்!

திங்கள், 10 அக்டோபர் 2022 (11:33 IST)
பிஎஸ்என்எல் நிறுவனம் இரு பிரீபெயிட் சலுகைகளை தனது வாடிக்கையாளர்களுக்காக அறிவித்துள்ளது. 


இந்தியாவில் தனியார் தொலைதொடர்பு நிறுவனங்கள் 5ஜி சேவையை தொடங்கி விட்ட நிலையில் 4ஜி மற்றும் 5ஜி சேவை எப்போது என்பது குறித்த தகவலை அரசின் தொலைதொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் அறிவித்தது.

பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் அடுத்த மாதம் முதல் 4ஜி சேவையை பெறலாம் என்றும் 4ஜி சேவையை பயனாளர்களுக்கு வரும் நவம்பர் மாதம் முதல் வழங்க இருப்பதாகவும் பிஎஸ்என்எல் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்தது.

மேலும் பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கு 5ஜி சேவை அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சுதந்திர தினத்தன்று வழங்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. தற்போது பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ. 269 மற்றும் ரூ. 769 விலையில் பிரீபெயிட் சலுகைகளை தனது வாடிக்கையாளர்களுக்காக அறிவித்துள்ளது. 

பிஎஸ்என்எல் ரூ. 269 திட்டம்:  

ரூ.269 சலுகையில் தினமும் 2 ஜிபி டேட்டா 30 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த சலுகை மொத்தமாக 60 ஜிபி டேட்டா கிடைக்கிறது. இத்துடன் தினமும் 100 எஸ்எம்எஸ் மற்றும் அன்லிமிடெட் வாய்ஸ் காலிங் வழங்கப்படுகிறது.

பிஎஸ்என்எல் டியூன்ஸ் வசதி,  இரோஸ் நௌ எண்டர்டெயின்மெண்ட், ஹார்டி மொபைல் கேம் சேவை, சாலஞ்சஸ் அரீனா கேம்ஸ், லிஸ்டின் பாட்காஸ்ட் சேவை, லாக்டுன் மற்றும் சிங் உள்ளிட்ட சேவைகள் வழங்கப்படுகின்றன.
ALSO READ: இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திதான் ஐஸ்வர்யா ராயை இளமையாக காட்டினார்களா?

பிஎஸ்என்எல் ரூ. 769 திட்டம்:

பிஎஸ்என்எல் ரூ.769 சலுகையில் தினமும் 2 ஜிபி டேட்டா 90 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது. இந்த சலுகையில் மொத்தம் 180 ஜிபி டேட்டா கிடைக்கும். இத்துடன் அன்லிமிடெட் வாய்ஸ் காலிங், தினமும் 100 எஸ்எம்எஸ், பிஎஸ்என்எல் டியூன்ஸ், இரோஸ் நௌ எண்டர்டெயின்மெண்ட், ஹார்டி மொபைல் கேம் சேவை, சாலஞ்சஸ் அரீனா கேம்ஸ், லிஸ்டின் பாட்காஸ்ட் சேவை, லாக்டுன் மற்றும் சிங் உள்ளிட்ட சேவைகள் வழங்கப்படுகின்றன. 

Edited By: Sugapriya Prakash

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்