பிரபல நிறுவனத்தின் மூலம் ஐரோப்பாவில் வெளியாகும் தனுஷின் வாத்தி!

Webdunia
வெள்ளி, 14 அக்டோபர் 2022 (09:53 IST)
தனுஷ் நடித்துவரும் தமிழ் தெலுங்கு மொழிகளில் உருவாகும் திரைப்படத்திற்கு ‘வாத்தி’ மற்றும் ’சார்’ என்ற டைட்டில்கள் வைக்கப்பட்டு உள்லது. இந்த படத்தில் தனுஷ் ஜோடியாக சம்யுக்தா மேனன் நடிக்கிறார். இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கி முடிக்கப்பட்டுள்ளன. இந்த படத்தை வெங்கட் அட்லோரி இயக்கி வருகிறார். இந்த படம் வரும் டிசம்பர் மாதம் 2 ஆம் தேதி வெளியாக் உள்ளது.

இந்நிலையில் திரையரங்க ரிலீஸூக்கு பின்னான இந்த படத்தின் ஓடிடி உரிமையை பிரபல தென்னிந்திய ஓடிடியான ஆஹா ஓடிடி கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அடுத்த ஆண்டு பொங்கலுக்கு இந்த படம் ஓடிடியில் வெளியாகும் என்றும் சொல்லப்படுகிறது. 

இந்நிலையில் இப்போது வாத்தி திரைப்படத்தின் ஐரோப்பிய ரிலீஸ் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தை சீசன்ஸ் கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பாக உமா மகேஸ்வர ராவ் கண்டா ரிலீஸ் செய்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்