பிரபாஸ் படத்தில் சிம்பு பட ஹீரோயின் நிதி அகர்வால்… உறுதி செய்த இயக்குனர்!

Webdunia
திங்கள், 21 ஆகஸ்ட் 2023 (07:38 IST)
பாகுபலி வெற்றிக்குப் பிறகு இந்தியா முழுவதும் அறியப்பட்ட நடிகராகியுள்ள பிரபாஸ் அதன் பின்னர் நடிக்கும் படங்கள் எல்லாம் பேன் இந்தியா ரிலீஸாகவே வெளிவருகின்றன. இப்போது அவர் கல்கி ஏடி 2898 மற்றும் சலார் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

இதில் சலார் திரைப்படம் செப்டம்பர் 28 ஆம் தேதி ரிலீஸாகிறது. கல்கி திரைப்படம் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த இரண்டு படங்கள் தவிர தெலுங்கு சினிமாவின் முன்னணி இயக்குனரான மாருதியுடன் புதுப் படத்துக்காக இணைந்துள்ளார் பிரபாஸ். இந்த படத்தின் படப்பிடிப்பு சில நாட்கள் நடந்து முடிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  இந்த படத்துக்கு ராஜா டீலக்ஸ் எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படத்தில் சிம்புவோடு ஈஸ்வரன் படத்தில் இணைந்து நடித்த நிதி அகர்வால் கதாநாயகியாக நடிக்க உள்ளதாக இயக்குனர் மாருதி அறிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்