ஓடிடியிலும் கவனம் பெறாத ஆதிபுருஷ்… ரிலீஸ் ஆனதே தெரியாத ரசிகர்கள்!

திங்கள், 14 ஆகஸ்ட் 2023 (13:16 IST)
பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஜூன் 16 ஆம் தேதி ரிலீஸ் ஆனது ஆதிபுருஷ் திரைப்படம். ஓம் ராவத் இயக்கிய இந்த படத்தில் பிரபாஸ், கீர்த்தி சனோன் மற்றும் சைஃப் அலிகான் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். ஆனால் எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடுமையான விமர்சனங்களையும் ட்ரோல்களையும் இந்த படம் எதிர்கொண்டுள்ளது.

இந்த நிலையில் இந்த படம் சில தினங்களுக்கு முன்னர் ஓடிடியில் திடீரென எந்தவிதமான விளம்பரமும் இன்றி வெளியாகி உள்ளது. தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் ஆகிய மொழிகளில் அமேசான் பிரைம் தளத்திலும் இந்தி மட்டும் நெட்பிளிக்ஸ் தளத்திலும்  ஒளிபரப்பாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் திரையரங்கில் இந்த படத்துக்கு எப்படி எந்த ஆதரவும் கிடைக்கவில்லையோ அதுபோலவே ஓடிடி ரிலீஸுக்கு பிறகும் இந்த படம் எந்த சலனத்தையும் உருவாக்கவில்லை. படம் ரிலீஸானதே பல ரசிகர்களுக்கு தெரியாமல் கிணற்றில் விழுந்த கல் போலக் கிடக்கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்