பாகுபலி ஷூட்டிங்கில் விபத்து.. பிரபாஸை துரத்தும் பிரச்சனை.. விரைவில் அறுவை சிகிச்சை!

ஞாயிறு, 20 ஆகஸ்ட் 2023 (08:27 IST)
பாகுபலி திரைப்படம் மூலமாக இந்திய அளவில் அறியப்படும் நடிகராகிவிட்டார் பிரபாஸ். அதன் பின்னர் அவர் நடிக்கும் படங்கள் எல்லாம் பேன் இந்தியன் ரிலீஸாகதான் வருகின்றன.

ஆனால் பாகுபலி தந்தை வெற்றியை மற்ற எந்த படமும் இதுவரை அவருக்குக் கொடுக்கவில்லை. இப்போது அவர் கல்கி ஏடி 2898 உள்ளிட்ட சில படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் வரும் டிசம்பர் மாதத்தில் அவரிக்கு கால் மூட்டுப்பகுதியில் அறுவை சிகிச்சை செய்ய உள்ளதாக சொல்லப்படுகிறது.

பாகுபலி ஷூட்டிங்கின் போது அவருக்கு ஏற்பட்ட விபத்தில் மூட்டுப் பகுதியில் காயம் ஏற்பட்டது. அதன் பின் விளைவுகள் இப்போது அவருக்கு ஏற்பட மருத்துவர்கள் அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைத்துள்ளதாக சொல்லப்படுகிறது. நவம்பர் மாதத்தில் அவர் கல்கி படத்தின் ஷூட்டிங்கை முடித்துவிட்டு இந்த அறுவை சிகிச்சையை மேற்கொள்ள உள்ளதாக சொல்லப்படுகிறது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்