'விஜய்யின் அரசியல் வருகை' பற்றி இயக்குனர் அமீர் அதிரடி கருத்து

Webdunia
புதன், 5 ஜூலை 2023 (21:29 IST)
சமீபத்தில் நடிகர் விஜய்  தமிழகம் முழுவதும் பிளஸ் 2, 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ, மாணவிகளை பெற்றோருடன் அழைத்து, கல்வி விழா நடத்தி அவர்களுக்கு விருந்து வைத்து சான்றிதழ் மற்றும் உதவித் தொகை வழங்கினார்.

இது அவரது அரசியல் வருகையின் ஆரம்பம் என்ற தகவல் வெளியானது. எனவே இது தமிழகத்தில் முக்கிய பேசு பொருளாக மாறியது. திமுக, அதிமுக, விசிக, அமமுக உள்ளிட்ட பல கட்சித் தலைவர்களும் சினிமா இயக்குனர்களும்  விஜய்யின் அரசியல் வருகை பற்றி கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த  நிலையில் பிரபல இயக்குனர் அமீர் பிரபல ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், நடிகர் விஜய்யின் அரசியல் வருகை பற்றி கருத்து தெரிவித்துள்ளார்.

அதில்,  ''மக்களிடம் இருந்து தான் ஒரு தலைவர் வருகிறார். வாக்குக்குப் பணம் வாங்கக்கூடாது என்று மாணவர்களின் பெற்றோரிடம் கூறச்  சொன்னது மாதிரி புதிய படத்திற்கு முதல் நாள் காட்சிக்கு ரூ.1500 டிக்கெட் வாங்குவதும் நேர்மையற்ற செயல். சரிசெய்ய வேண்டும் என்றால் எல்லாவற்றையும் சரிசெய்ய வேண்டும்'' என்று தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜய் இதுபற்றி பேச வேண்டும் என்று சினிமா விமர்சகர் புளூ சட்டை மாறன் தன் டுவிட்டர் பக்கத்தில் இதைப் பகிர்ந்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்