தோனி ‘அன்கேப்ட்’ வீரராக அறிவிக்கப்பட்டால் அவர் சம்பளம் இவ்வளவு குறையுமா?

vinoth
செவ்வாய், 20 ஆகஸ்ட் 2024 (08:04 IST)
ஐபிஎல் அடுத்த சீசனுக்கு ஒவ்வொரு அணியும் எத்தனை வீரர்களைத் தக்கவைக்கலாம் என்ற சர்ச்சைகள் நிலவி வருகின்றன. அணிகள் நான்குக்கும் மேற்பட்ட வீரர்களை தக்கவைக்க உரிமை அளிக்க வேண்டும் என பிசிசிஐயிடம் அழுத்தம் கொடுத்து வருவதாக சொல்லப்படுகிறது.

இதற்கிடையில் பிசிசிஐ ஒரு புதிய விதியை (2021 ஆம் ஆண்டு வரை அமலில் இருந்த விதிதான்) அமல்படுத்த உள்ளதாகவும் அதை அமல்படுத்தினால்தான் தோனி சிஎஸ்கே அணியில் தக்கவைக்கப்படுவார் என்றும் சொல்லப்படுகிறது. சர்வதேசப் போட்டிகளில் ஓய்வு பெற்று ஐந்து ஆண்டு ஆனவர்களை ‘அன்கேப்ட்’ (அதாவது உள்ளூர் வீரர்) வீரராக அறிவிக்க உள்ளதாகவும், அப்படி அறிவித்தால் தோனியை சிஎஸ்கே அனி “அன்கேப்ட் பிளேயர்” பிரிவில் தக்கவைக்கும் எனவும் சொல்லப்படுகிறது.

ஆனால் அப்படி அன்கேப்ட் ப்ளேயராக தோனி தக்கவைக்கப்பட்டால் அவரின் சம்பளம் 4 கோடி ரூபாய்க்குள் சுருக்கப்படும். தற்போது அவருக்கு 12 கோடி ரூபாய் சம்பளத்தை சி எஸ் கே அணி அளித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்