ரஜினியின் அடுத்த படத்தின் டைட்டில்-ஃபர்ஸ்ட்லுக் வெளியீடு

Webdunia
செவ்வாய், 9 ஏப்ரல் 2019 (08:35 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் 'தலைவர் 167' படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் சற்றுமுன் வெளியாகி சமூக வலைத்தளங்களில் டிரண்டாகி வருகிறது.
 
இந்த படத்திற்கு 'தர்பார்' என்ற டைட்டிலை படக்குழுவினர் தேர்வு செய்துள்ளனர். ரஜினி படத்திற்கு இந்த டைட்டில் கச்சிதமாக பொருந்தியிருப்பதாகவும், டைட்டிலை போலவே படத்தையும் சூப்பராக ஏ.ஆர்.முருகதாஸ் உருவாக்குவார் என்றும் ரஜினி ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். 
 
இந்த ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரில் ரஜினிகாந்த் இளமையான தோற்றத்துடன் கருப்புக்கண்ணாடியும் அணிந்துள்ளார். மேலும் அவரை சுற்றி பயங்கர ஆயுதங்கள் இருப்பது போன்று உள்ளதால் இந்த படம் அதிரடி ஆக்சன் படம் என்றே தோன்றுகிறது. மேலும் இந்த படத்தில் ரஜினி போலீஸ் கேரக்டர் என்பதும் இந்த போஸ்டரில் இருந்து தெரியவருகிறது
 
ரஜினிகாந்த், நயன்தாரா உள்பட பலர் நடிக்கவுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்யவுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு நாளை முதல் மும்பையில் தொடங்கவுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்