14 வருடங்களுக்கு பிறகு மீண்டும் ரஜினிக்கு ஜோடியான நயன்தாரா!

வியாழன், 28 மார்ச் 2019 (11:09 IST)
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் தலைவர் 166 படத்தில் ரஜினிக்கு ஜோடியாக 14 வருடங்கள் கழித்து மீண்டும் நயன்தாரா நடிக்கிறார். 
 
பேட்ட படத்தின் வெற்றியை தொடர்ந்து ரஜினிகாந்த் அடுத்ததாக ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் அரசியில் கலந்த மசாலா படத்தில் நடிக்கவிருக்கிறார். இது ரஜினியின் கேரியரில் 166 -வது படமாக உருவாகவிருக்கிறது. இப்படத்தை பற்றி எந்தவிதமான அதிகாரபூர்வ தகவல்களும் இன்னும் வெளிவரவில்லை இருந்தாலும் இப்படத்தை பற்றின அப்டேட்ஸ் வந்தவண்ணமாகவே உள்ளது.
 
அந்த வகையில் தற்போது சொல்லவரும் தகவல் என்னவென்றால், இப்படத்திற்காக  ஹீரோயினாக நடிக்க, முன்னணி நடிகைகள் சிலரிடம் படக்குழுவினர் பேசி வந்தனர். இந்தி நடிகைகளிடம் கால்ஷீட் கேட்டிருந்ததாகக் கூறப்பட்டது. 
 
இந்நிலையில், தற்போது லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். இவர், ஏற்கனவே, ’சந்திரமுகி’ படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்திருந்தார். மேலும் குசேலன், சிவாஜி போன்ற படங்களிலும் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.  தற்போது சந்திரமுகி படத்திற்கு பிறகு  மீண்டும் நயன்தாரா ரஜினியுடன் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.
 
சந்தோஷ்சிவன் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கிறார். மார்ச் மாதமே தொடங்க வேண்டிய படம் தேர்தல் காரணமாக சற்று தள்ளிப்போனது. மே அல்லது ஜூனில் படம் துவங்கும் என கூறப்பட்ட நிலையில் தற்போது ஏப்ரல் 10ம் தேதி மும்பையில் படப்பிடிப்பு துவங்க இருப்பதாக கூறப்படுகிறது. காலா படத்தைப்போலவே இந்தபடத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு, மும்பையிலேயே நடைபெறயிருப்பதாக கூறப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்