தனுஷ் ஜோடியாக ராஷ்மிகா மந்தனா… எந்த படத்தில் தெரியுமா?

திங்கள், 10 அக்டோபர் 2022 (15:18 IST)
நடிகர் தனுஷ் நடிக்க உள்ள புதிய திரைப்படத்தில் ராஷ்மிகா கதாநாயகியாக நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

நடிகர் தனுஷ் நடித்த ’வாத்தி’ திரைப்படம் டிசம்பர் 2ம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் அவர் தற்போது அருண் மாதேஸ்வரன் நடிப்பில் உருவாகிவரும் ’கேப்டன் மில்லர் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் மூன்று மாதங்களில் முடிவடைந்துவிடும் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் பிரபல தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பு ஜனவரி மாதம் முதல் தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த படம் 1950 கள் கால பின்னணியில் அரசியல் கதைகளத்தோடு உருவாக உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்