யுட்யூபில் மிகவும் பிரபலமாக அறியப்படும் கோபி மற்றும் சுதாகர் கிரவுட் பண்டிங் மூலமாக ஒரு படத்தை தொடங்க உள்ளதாக சில ஆண்டுகளுக்கு முன்னர் அறிவித்தனர். இதற்காக தங்கள் யூட்யூப் சேனலின் பாலோயர்ஸிடம் இருந்து நிதி கேட்டனர். இதன் மூலம் சில கோடிகள் வரை வசூலானதாக சொல்லப்படுகிறது. ஆனால் அந்த படத்தை இன்னும் தொடங்காமல் வேறு ஒரு படத்தை தங்களது பரிதாபங்கள் புரொடக்ஷன் மூலமாக தயாரித்து வருகின்றனர்.
அறிமுக இயக்குனர் விஷ்ணு விஜயன் இயக்கும் இந்த படத்துக்கு ஓ காட் பியூட்டிஃபுல் என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. சில மாதங்களுக்கு முன்னர் டைட்டில் டீசர் அனிமேஷன் வடிவில் மூன்று குரங்குகள் வைத்து உருவாக்கப்பட்டு ரிலீஸாகி கவனம் பெற்றது. அதில் 90 ஸ்கிட்ஸ்களின் பிரதிநிதியாக ஒரு குரங்கும், ஜென் Z கிட்ஸ்களின் பிரதிநிதியாக ஒரு குரங்கும் இடம்பெற்று இருந்தது.