நெகட்டிவ் ரிவ்யூ பயம்… அதிகாலைக் காட்சி இல்லாமல் ரிலீஸ் ஆகும் திருச்சிற்றம்பலம்

Webdunia
வியாழன், 18 ஆகஸ்ட் 2022 (09:01 IST)
தனுஷ் நடிப்பில் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் திருச்சிற்றம்பலம் என்ற திரைப்படம் இன்று ரிலீஸ் ஆகியுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தில் ப்ரியா பவானி சங்கர், நித்யா மேனன் மற்றும் ராஷி கண்ணா ஆகிய மூன்று நாயகிகள் நடித்துள்ளனர். மற்ற முக்கியக் கதாபாத்திரங்களில் பாரதிராஜா மற்றும் பிரகாஷ் ராஜ் ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்த படத்தை தமிழகத்தில் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது. இந்நிலையில் வழக்கமாக சென்னை போன்ற நகரங்களில் அதிகாலைக் காட்சிகள் முன்னணி நடிகர்களின் படங்களுக்கு ஏற்பாடு செய்யப்படும். ஆனால் திருச்சிற்றம்பலம் படத்துக்கு அதிகாலை காட்சிகள் இல்லை. ஏனென்றால் சமீபகாலமாக அதிகாலைக் காட்சி பார்க்கும் ரசிகர்கள் நெகட்டிவ் விமர்சனங்களைக் கொடுப்பதால் படத்தின் வசூல் பாதிக்கப்படுகிறதாம். அதனால் இந்த முடிவை எடுத்துள்ளதாக திரைவட்டாரங்களில் பேசப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்