தனுஷின் கர்ணன் பட கதை இதுதானா? வெளியான ரகசியம்!

Webdunia
வியாழன், 11 பிப்ரவரி 2021 (17:00 IST)
தனுஷ் நடித்துள்ள கர்ணன் படத்தின் கதை பற்றிய சீக்ரட்டான தகவல்கள் வெளியாகியுள்ளன.

தனுஷ் நடிப்பில் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாக்கிய கர்ணன் திரைப்படத்தின் படப்பிடிப்பு கிட்டதட்ட முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த படத்தின் காட்சிகள் லாக்டவுனால் பாதிக்கப்பட்டதால் தளர்வுகளுக்குப் பின்னர் மீண்டும் படப்பிடிப்பு தொடங்கி நடத்தப்பட்டது. சமீபத்தில் படப்பிடிப்பு முடிந்த இந்த படம் ஏப்ரல் 9 ஆம் தேதி வெளியாக உள்ளது.

இந்நிலையில் இந்த படம் மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்களின் கதை என ஆரம்பத்தில் இருந்தே சொல்லப்பட்டு வந்த நிலையில் இப்போது புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி ‘தங்கள் ஊருக்கு பேருந்து வராத சூழலில் மக்களின் நலனுக்காக அதை பல்வேறு தடைகளைத் தாண்டி செய்து முடிக்கும் நபராக இந்த படத்தில் தனுஷ் நடித்துள்ளாராம். அதனால் ஏற்படும் சாதிய மேலாதிக்கத்தை அவர் எப்படி எதிர்கொள்கிறார் என்பதே கதையாம்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்