தீபாவளி ரிலீஸ் போட்டியில் இணைந்த பிரதீப் ரங்கநாதன் படம்.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

Mahendran

வெள்ளி, 25 ஜூலை 2025 (18:08 IST)
வரவிருக்கும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, நடிகர் சூர்யாவின் 'கருப்பு' உட்பட சில முக்கியப் படங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், நடிகர் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகியுள்ள 'டூட்' திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடிக்கும் 'டூட்' திரைப்படத்தை கீர்த்தீஸ்வரன் இயக்கி வருகிறார். கடந்த சில மாதங்களாக இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இந்த திரைப்படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக, மமிதா பைஜூ கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்த  திரைப்படத்தை மைதிலி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.
 
இந்த நிலையில் இன்று  பிரதீப் ரங்கநாதனின் பிறந்தநாளை முன்னிட்டு, தயாரிப்பு நிறுவனம் அவரது பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்களை தங்கள் 'எக்ஸ்' பக்கத்தில் வெளியிட்டது. அத்துடன், 'டூட்' திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிட்டு ரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை அளித்துள்ளது. இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில், மமிதா பைஜூ படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்