தற்போதைய தலைவர் சிவன் சீனிவாசன், பரத், மற்றும் தினேஷ் தலைமையில் மூன்று அணிகள் போட்டியிடுகின்றன. ஆர்த்தி மற்றும் அவரது கணவர் கணேஷ்கர் சுயேச்சையாக போட்டியிடுகின்றனர்.
விஜய் டிவியின் 'சிந்து பைரவி' தொடரில் நடிக்க ஒப்புக்கொண்டு விலகியதால், அவருக்கு ஏற்கெனவே ஓராண்டு தடை விதிக்கப்பட்டிருந்தது. "கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டு, இரண்டு கதாநாயகிகள் கதை என தெரிந்ததால் விலகினேன்" என ரவீனா விளக்கமளித்திருந்தார். தற்போது, இந்த தடை காரணத்தை காட்டியே அவரது வேட்புமனுவும் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது சின்னத்திரை வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.