தனுஷ் வெளியிட்ட…சங்கத் தலைவன் ரிலீஸ் தேதி அறிவிப்பு…

புதன், 10 பிப்ரவரி 2021 (19:11 IST)
சமுத்திரகனி நடித்துள்ள  சங்கத்தலைவன் என்ற படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளார் நடிகர் தனுஷ்.

தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த தயாரிப்பாளர்களில் ஒருவரான வெற்றிமாறன் தயாரிப்பில் சமுத்திரகனி சங்கத்தலைவன் என்ற சமுதாய அக்கறைகொண்ட படத்தில் நடித்துள்ளார்.

சமூகத்தில் நடக்கும் அவலங்களை எதிர்த்து மிகச்சிறந்த தரமான படங்களை கொடுக்கும் சமுத்திரகனி ஹீரோவாக நடித்துள்ள சங்கத்தலைவன் படம் தொழிலாளர்களுக்காக முதலாளிகளை எதிர்த்து நியாயத்தை தேடும் படமாக உருவாகியுள்ளது.இப்படத்தை மணிமாறன் இயக்கியுள்ளார்.

வெற்றி மாறன் தயாரித்துள்ள இப்படத்தில் சமுத்திர கனியுடன் விஜே ரம்யா, சுனு லக்ஷ்மி, கருணாஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். போராட்டம், அரசாங்க எதிர்ப்பு உள்ளிட்டவற்றை உள்ளடக்கி உருவாகியுள்ள இப்படத்தை மணிமாறன் இயக்கியுள்ளார். இவர் தனுஷின் அசுரன் பட கதையை எழுதியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று இப்படத்தின் ட்ரைலர்  மற்றும் இப்படத்தின் முதல் லிரிகள் வீடியோ பாடல் யூடியூபில் வெளியாகிசில மாதங்களுக்கு முன் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதியை நடிகர் தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

அதில், சங்கத்தலைவன் பட ரிலீஸ் தேதியை அறிவிப்பதில் மகிழ்கிறேன். வெற்றிமாறன், சமுத்திர கனி மற்றும் படக்குழுவுக்கு வாழ்த்துகள் எனத்தெரிவித்துள்ளார்.
 

Happy to announce the release date of sangathalaivan .. wishing all the very best to @VetriMaaran @thondankani manimaaran and team. pic.twitter.com/Xshft0UYlA

— Dhanush (@dhanushkraja) February 10, 2021

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்