இந்தியாவில் இளைஞர்களிடையே பிரபலமாக இருந்த ஆபாச, கவர்ச்சி தொடர்களை வெளியிடும் 24 ஓடிடி தளங்களை தடை செய்து மத்திய அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் அனைவரிடமும் ஸ்மார்ட்போன், குறைந்த விலையில் இணைய வசதி உள்ள நிலையில், ஏராளமான ஓடிடி தளங்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. இதில் Ullu, ALTT, Desiflix என பல ஆபாச ஓடிடி தளங்களும் இளைஞர்களிடையே பரவலாகத் தொடங்கியுள்ளது. இதற்கென பிரத்யேகமாக சில நிறுவனங்கள் ஆபாச தொடர்களை தயாரித்து வரும் நிலையில் இதனால் சிறுவர்கள், இளைஞர்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இவ்வாறாக ஆபாச தொடர்களை வெளியிடும் 24 ஓடிடி தளங்களை மத்திய அரசின் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் தடை விதித்துள்ளது. அதன்படி, ALTT, ULLU, Desiflix, MoodX, NeonX, Fugi, MojiFlix, Kangan App, Gulab, Boomex, Navarasa TV, Jalwa app, Bull app, Hitprime, Feneo, Sol Talkies, ShowX, Wow entertainment, adda tv, HotX VIP, Hulchul app உள்ளிட்ட ஓடிடி தளங்கள் தடை செய்யப்பட்டுள்ளன.
ஆபாச வீடியோக்கள் சிறுவர்கள் கைக்கு எளிதில் கிடைப்பதை தடுக்கவும், டிஜிட்டல் கண்டெண்ட் ஒழுக்கம் மற்றும் கட்டுபாடுக்கு உட்பட்டது என்பதை உறுதி செய்யும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
Edit by Prasanth.K