தனுஷின் ‘கர்ணன்’ ரிலீஸ் தேதி: அதிகாரபூர்வ அறிவிப்பு

Webdunia
ஞாயிறு, 31 ஜனவரி 2021 (11:35 IST)
தனுஷின் ‘கர்ணன்’ ரிலீஸ் தேதி: அதிகாரபூர்வ அறிவிப்பு
தனுஷ் நடித்த 'ஜகமே தந்திரம்' என்ற திரைப்படம் வரும் மார்ச் மாதம் ஓடிடியில் ரிலீசாகும் என்று செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் அவருடைய அடுத்த படமான ’கர்ணன்’ திரையரங்குகளில் வரும் ஏப்ரல் மாதம் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது 
 
சற்றுமுன் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் ’கர்ணன்’ திரைப்படம் திரையரங்குகளில் வரும் ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று அறிவித்து உள்ளார். சரியான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிகிறது. மேலும் இதுகுறித்த டீசர் வீடியோ ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார் என்பதும், அதனை தொடர்ந்து ’கர்ணன்’ படத்தின் இரண்டு புதிய போஸ்டரையும் அவர் வெளியிட்டுள்ளார்
 
தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். வரும் மார்ச் ஏப்ரல் ஆகிய இரண்டு மாதங்களில் அடுத்தடுத்து தனுஷின் படங்கள் வெளியாவதை அடுத்து தனுஷ் ரசிகர்கள் குஷியில் உள்ளனர்,

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்