அழகு பதுமை ரகுல் ப்ரீத்துடன் கார்த்தி டூயட்! தேவ் பட அணங்கே வீடியோ பாடல் இதோ!

Webdunia
வியாழன், 7 பிப்ரவரி 2019 (19:07 IST)
கார்த்தியின் தேவ் படத்தில் இடம்பெற்ற அணங்கே  வீடியோ பாடல் வெளியானது. 


 
அறிமுக இயக்குனர் ரஜத் ரவி ஷங்கர்  இயக்கத்தில்  கார்த்தி நடித்திருக்கும் தேவ் படத்தில் ஜோடியாக ரகுல் ப்ரீத்சிங் நடிக்கிறார். ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தைத் தொடர்ந்து இவர்கள் இருவரும் இரண்டாவது முறையாக இப்படத்தில் ஜோடிபோட்டுள்ளனர்.
 
இப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், பிரகாஷ் ராஜ், ரேணுகா, அம்ருதா, ஆர்.ஜே. விக்னேஷ்காந்த் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
 
காதலர் தினத்தின் ஸ்பெஷலாக வருகிற பிப்ரவரி 14 ம் தேதி வெளிவரவிருக்கும்  இப்படத்தில் அணங்கே என்ற டூயட் பாடல் இடம்பெற்றுள்ளது. இப்பாடலுக்கு கார்த்தி மற்றும் ரகுல் ப்ரீத்தின் துள்ளலாக நடனமாடியுள்ளனர்.  
 
இந்நிலையில் தற்போது இந்த வீடியோ பாடல் இணையத்தில் வெளியாகி பெரும்பான்மையான  ரசிகர்களால் ரசிக்கப்பட்டு ட்ரெண்டிங்காகி வருகிறது. கலர்புல்லாக உருவாகியுள்ள அணங்கே வீடியோ பாடல் ரசிகர்களுக்கு ஒரு ட்ரீடாக அமையும் என படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்