பாவம் டிடி இத பார்த்தா வயிறு எரியும் - விவாகரத்து செய்த கணவரின் இரண்டாவது மனைவி இவரா?

Webdunia
சனி, 22 மே 2021 (15:42 IST)
விஜய் டிவியில் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ஹீரோயின் ரேஞ்சுக்கு உச்சத்தை தொட்டவர் டிடி. அந்த நிகழ்ச்சிகளில் கிடைத்த அமோக வரவேற்பை வைத்து தற்போது ஒருசில படங்களிலும் நடித்து வருகிறார். 
 
காபி வித் டிடி என்ற நிகழ்ச்சியின் மூலம் பெரும் பிரபலமான இவர் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக தனது தொகுப்பாளர் பணியை செய்து வருகிறார். எவ்வளவு பெரிய உச்ச நடிகராக இருந்தாலும் எந்த வித பயமும் இன்றி பட படவென அனல் பறக்கும் ரேப்பிட் பஃயர் கேள்விகளை கேட்டு உச்ச நடிகர்களை திக்குமுக்காட செய்திடுவார் டிடி.
 
இவர் தனது நெருங்கிய நண்பரான ஸ்ரீகாந்த் ரவசந்திரனை காதலித்து கடந்த 2014ல் திருமணம் செய்துக்கொண்டார். பின்னர் இருவருக்கும் ஏற்பட்ட மனக்கசப்பினால் பரஸ்பர மனதுடன் 2017ல் விவாகரத்து செய்துவிட்டனர். 

இந்நிலையில் ஸ்ரீகாந்த் பெண் ஒருவருடன் கட்டியணைத்தபடி நெருக்கமாக இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி தீயாக பரவி வருகிறது. இவர் தான் ஸ்ரீகாந்தின் இரண்டாவது மனைவியா என எல்லோரும் கேள்வி எழுப்பி வருகின்றனர் அதை உறுதிப்படுத்தும் வகையில் தொகுப்பாளினி ரம்யா ச்சோ கியூட் என கமெண்ட் செய்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்