கொரோனாவுக்கு சித்தமருந்து லேகியம்: ஆயிரக்கணக்கில் குவிந்த கூட்டத்தால் பரபரப்பு!

வெள்ளி, 21 மே 2021 (17:46 IST)
கொரோனாவுக்கு சித்தமருந்து லேகியம்: ஆயிரக்கணக்கில் குவிந்த கூட்டத்தால் பரபரப்பு!
கொரோனா வைரஸை குணப்படுத்தும் சித்த மருந்து லேகியம் இலவசமாக விநியோகம் செய்ய இருப்பதாக அறிவிக்கப்பட்டதை அடுத்து ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கில் கூடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
ஆந்திராவில் உள்ள கிருஷ்ணா மாவட்டம் என்ற பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் கொரோனாவுக்கு சித்த மருந்து லேகியம் 3,000 பேருக்கு இலவசமாக வழங்கப்பட இருப்பதாக வாட்ஸப்பில் தகவல் வந்தது. இதனை அடுத்து அங்கு ஆயிரக்கணக்கான மக்கள் ஒரே நேரத்தில் கூடினர் 
 
இதனால் அங்கு பாதுகாப்புக்கு இருந்த காவல்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர். பலரும் மாஸ்க் அணியாமல் தனிமனித இடைவெளியை கடைபிடிக்காமல் லேகியத்தை வாங்குவதற்காக கூடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அம்மாவாவட்ட ஆட்சியர் லேகியம் விநியோகிக்க தடை விதித்தார்
 
இருப்பினும் அந்த பகுதி எம்எல்ஏ ஒருவரின் தலையீடு காரணமாக தொடர்ந்து கொரோனா வைரஸ் லேகியம் வழங்கப்பட்டது. இந்த லேகியம் ஒரு சிலருக்கு மட்டுமே கிடைத்ததாகவும் பலருக்கு கிடைக்காததால் ஏமாற்றத்துடன் திரும்பியதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. லேகியம் வாங்குவதற்காக ஆயிரக்கணக்கில் ஒரே நேரத்தில் கூடியதால் பலருக்கு கொரோனா தொற்று பரவி இருக்கலாம் என சுகாதாரத் துறையினர் அச்சம் தெரிவித்துள்ளனர்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்