பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினி டிடியும் கடந்த சில வாரங்களாகவே தனது டுவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பழைய புகைப்படங்களை பதிவு செய்து வந்தார். மற்ற நடிகர்-நடிகைகள் அவ்வப்போது புதிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வந்த நிலையில் இவர் மட்டும் பழைய புகைப்படங்களை பதிவு செய்வதால் விரைவில் அவர் லைவ்வில் வந்து ரசிகருடன் பேச வேண்டும் என்று ரசிகர்கள் கோரிக்கை விடுத்தனர்
இந்த நிலையில் திடீரென தற்போது அவர் கால் எலும்பு முறிந்துள்ள புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியபோது, ‘தனக்கு இடது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாகவும், இதனையடுத்து கடந்த சில நாட்களாகத்தான் முழு ஓய்வில் இருந்ததாகவும் தனது இன்ஸ்டாகிராமில் குறிப்பிட்டுள்ளார்
எலும்புமுறிவு கால்கட்டுடன் டிடி
இந்த ஓய்வு நேரத்தில்தான் புத்தகங்கள் படிப்பது, டிவியில் சினிமா பார்ப்பது ஆகியவற்றின் மூலம் பொழுதை கழித்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார். இதுநாள் வரை இந்த தகவலை ரசிகர்களுக்கு தெரிவிக்க வேண்டாம் என்றுதான் நினைத்ததாகவும், தற்போது ரசிகர் முழு ஆதரவும் ஆசியும் தேவை என்பதால் இது குறித்து தகவல் தெரிவித்ததாகவும் டிடி குறிப்பிட்டுள்ளார்
மேலும் தனக்கு சிகிச்சை அளித்த டாக்டர் ரனீஷ் அவர்களுக்கு, பிசியோதெரபி அளித்து வரும் மருத்துவர்களுக்கும் தனது நன்றி என்று டிடி கூறியுள்ளார். இந்த எலும்பு முறிவு பிரச்சனையில் இருந்து விரைவில் தான் மீண்டும் வழக்கம்போல் பணியைத் தொடருவேன் என்றும் அவர் நம்பிக்கையுடன் குறிப்பிட்டு உள்ளார் என்பதும் ரசிகர்கள் அவர் விரைவில் குணமாக வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது