நடிகை அனிகாவின் புதிய போஸ்டரால் சர்ச்சை

Webdunia
செவ்வாய், 9 மே 2023 (19:07 IST)
நடிகை அனிகா   சுரேந்திரனின் புதிய போஸ்டர் ஒன்று சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக  அறிமுகமானவர் நடிகை அனிகா சுரேந்திரன். இவர் தமிழ் சினிமாவில்  அஜித் நடிப்பில், கெளதம் மேனன் இயக்கத்தில் உருவான என்னை அறிந்தால் என்ற படத்தில், குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.

அதன்பின்னர், அஜித் நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவான விஸ்வாசம் படத்திலும் அஜித்தின் மகளாக நடித்தார். இவருக்கு ரசிகர்களின் மனதிலும் இடம்பிடித்தார்.

தற்போது சினிமாவில் ஹீரோயினாக அனிகா நடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், தன் சமூக வலைதளப் பக்கத்தில் கவர்ச்சிப் புகைப்படங்களை வெளியிட்டு வந்தார்.

இந்த நிலையில், கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒன்றில் அனிகா சுரேந்திரனின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது. இதில்,  நந்தினி 16.07.23 ஞாயிற்றுக்கிழமை இரவில் மரணமடைந்தார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இது ஒரு படத்திற்கான போஸ்டர் என்று கூறப்பட்டாலும் ,  சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்