அஜித்தின் அடுத்தகட்ட உலக பைக் டூர்.. சுரேஷ் சந்திரா ட்வீட்..!

செவ்வாய், 9 மே 2023 (13:10 IST)
நடிகர் அஜித் கடந்த சில மாதங்களாக பைக்கில் உலகம் முழுவதும் சுற்றி வருகிறார் என்பதும் சமீபத்தில் கூட அவர் நேபாளம் மற்றும் பூட்டான் ஆகிய நாடுகளுக்கு சென்றார் என்பதும் தெரிந்ததே. 
 
இந்த நிலையில் அடுத்த வாரம் சென்னை திரும்பும் அஜித் அதன் பிறகு மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகும் விடாமுயற்சி படத்தில் படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார். 
இந்த நிலையில் அஜித்தின் அடுத்த கட்ட உலக பைக் சுற்றுப்பயணம் குறித்த அறிவிப்பை அவரது மேனேஜர் சுரேஷ் சந்திரா தெரிவித்துள்ளார். அஜீத் இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் சுற்றுப்பயணம் செய்துவிட்டார் என்றும் அது மட்டும் இன்றி அண்டை நாடுகளான பூடான் நேபாளம் ஆகிய நாடுகளுக்கும் சென்று விட்டார் என்றும் பல சவாலான பாதைகளை அவர் கடந்துவிட்டார் என்றும் தெரிவித்துள்ளார். 
 
இதனை அடுத்து அஜித்தின் அடுத்தகட்ட பைக்ட் டூர் இந்த ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கும் என்றும் சுரேஷ் சந்திரா தனது ட்வீட்டில் தெரிவித்துள்ளார்
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்