விஜய் டிவியில் ஒளிப்பரப்பான லொள்ளு சபா நிகழ்ச்சி ஒளிப்பரப்பானக் காலகட்டததை விட இப்போது இணையதளங்களில் வெகுப் பிரபலமாக இருந்து வருகிறது. வாரம் ஒரு தமிழ் படத்தை எடுத்துக்கொண்டு அதன் அபத்தம், ஓவர் செண்ட்டிமெண்ட் மற்றும் சண்டைக்காட்சிகளை நக்கலடித்து அதன் ஸ்பூப் வடிவமாக வெளியாகிக்கொண்டிருந்தது.
இந்நிலையில் இப்போது லொள்ளு சபா நிகழ்ச்சி வேறொரு வடிவத்தில் மீண்டும் வர உள்ளது. நெட்பிளிக்ஸ் தளத்தில் “ஜோக்கிங் பேட்” என்ற பிரேக்கிங் பேட் நிகழ்ச்சியின் மூலம் ரி எண்ட்ரி கொடுக்க உள்ளனர். பிரேக்கிங் பேட் என்ற ஹாலிவுட் சீரிஸ் உலகம் முழுவதும் ரசிகர்களைக் கவர்ந்த வெற்றி பெற்ற சீரிஸ் என்பது குறிப்பிடத்தக்கது.