விஜய்காந்தோடு லோகேஷுக்கு இப்படி ஒரு கனெக்‌ஷன் இருக்கா… ?

Webdunia
திங்கள், 20 மார்ச் 2023 (08:53 IST)
தமிழ் சினிமாவில் தற்போது அதிகம் விரும்பப்படும் இயக்குனர்களில் ஒருவராக இருந்து வருகிறார் லோகேஷ் கனகராஜ். அவர் இதுவரை இயக்கிய மாநகரம், கைதி, மாஸ்டர் மற்றும் விக்ரம் என அனைத்து படங்களும் ஹிட் அடித்துள்ளன. அடுத்து விஜய் நடிப்பில் ‘லியோ’ படத்தை இயக்கி வருகிறார்.

சினிமாவுக்கு வருவதற்கு முன்பாக லோகேஷ் கனகராஜ், யாரிடமும் உதவி இயக்குனராக பணியாற்றவில்லை. அவர் இயக்கிய குறும்படமான களம் கவனம் பெற்ற நிலையில் அடுத்து மாநகரம் படத்தை இயக்கும் வாய்ப்பைப் பெற்றார்.

சினிமாவுக்கு சம்மந்தம் இல்லாத குடும்பத்தில் பிறந்தவரான லோகேஷுக்கும், நடிகர் விஜய்காந்துக்கும் மறைமுகமான தொடர்பு ஒன்று உள்ளது. விஜய்காந்தின் நெருங்கிய நண்பரும் அவரை வைத்து தயாரித்தவருமான சௌந்தர் என்பவரின் மகளைதான்  லோகேஷ் திருமணம் செய்துள்ளாராம்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்