நீங்க ஓவர் ரேட்டட் இயக்குனர்… ரசிகரின் ட்வீட்டில் லோகேஷ் செய்த குறும்பு செயல்!

வியாழன், 16 மார்ச் 2023 (07:59 IST)
விக்ரம் என்ற பிளாக்பஸ்டர் ஹிட் படத்துக்குப் பிறகு லோகேஷ், இப்போது விஜய் நடிப்பில் லியோ படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், மன்சூர் அலிகான் ஆகியோர் வில்லன்களாக நடிக்க உள்ளனர். படத்தின் முக்கியக் காட்சிகளைப் படமாக்க படக்குழு மொத்தமும், காஷ்மீருக்கு சில நாட்களுக்கு முன்னர் பயணம் செய்தது. அங்கு மோசமான வானிலை நிலவினாலும் படக்குழு அங்கேயே தங்கி இப்போது ஷூட்டிங்கை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் தற்போது விஜய் மற்றும் கௌதம் மேனன் சம்மந்தப்பட்ட காட்சிகளை படமாக்கி வருகிறார் லோகேஷ். சமீபத்தில் சஞ்சய் தத், லியோ ஷூட்டிங்கில் இணைந்துள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் லோகேஷ் கனகராஜின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டதை அடுத்து பலரும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர். அதில் ஒரு ரசிகர் “ஓவர் ரேட்டட் இயக்குனர்” என சொல்லி அதில் லோகேஷை டேக் செய்தார். அந்த நபரின் ட்வீட்டை லைக் செய்து தக் லைஃப் மொமண்டை செய்துள்ளார் லோகேஷ்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்