6 நாளுக்குள்ளயே இப்படி ஒரு எமோஷனல் பாண்டிங்கா? லோகேஷுக்கு வாழ்த்து தெரிவித்த சஞ்சய் தத்!

செவ்வாய், 14 மார்ச் 2023 (14:52 IST)
விஜய் அடுத்து நடிக்கும் லியோ படத்தின் ப்ரமோஷன் வீடியோ மற்றும் டைட்டில் போஸ்டர் வெளியாகி வைரல் ஆனது. இந்த படத்தில் சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், மன்சூர் அலிகான் ஆகியோர் வில்லன்களாக நடிக்க உள்ளனர். படத்தின் முக்கியக் காட்சிகளைப் படமாக்க படக்குழு மொத்தமும், காஷ்மீருக்கு சில நாட்களுக்கு முன்னர் பயணம் செய்தது. இந்நிலையில் இப்போது திட்டமிட்ட காட்சிகளை எடுத்து முடிப்பதற்கு மோசமான வானிலை காரணமாக மிகுந்த சிரமத்தை சந்திப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனாலும் படக்குழு அங்கேயே தங்கி இப்போது ஷூட்டிங்கை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் தற்போது விஜய் மற்றும் கௌதம் மேனன் சம்மந்தப்பட்ட காட்சிகளை படமாக்கி வருகிறார் லோகேஷ். சமீபத்தில் சஞ்சய் தத், லியோ ஷூட்டிங்கில் இணைந்துள்ளார்.

இந்நிலையில் லோகேஷ் இன்று பிறந்தநாளைக் கொண்டாடும் நிலையில், சஞ்சய் தத் லோகேஷுடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து, “இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் என் சகோதரர், மகன் மற்றும் குடும்பம் லோகேஷ் கனகராஜ். கடவுள் உங்களுக்கு அமைதி, வெற்றி, சந்தோஷத்தை அளிக்கட்டும். நான் எப்போதும் உங்களோடு இருப்பேன். ஆசிர்வதிக்கப்பட்டவரா இருங்கள். லவ் யூ” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்