விக்ரம், லியோ பாணியில் வருகிறது ‘சூர்யா 42’ ப்ரோமோ!

சனி, 18 மார்ச் 2023 (18:33 IST)
நடிகர் சூர்யா, தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் தலைப்பு இன்னும் அறிவிக்கப் படவில்லை.இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு கோவாவில் முடிவடைந்த நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்றது. தற்போது விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில் படத்துகு ‘வீர்’ என்று தலைப்பு வைக்க இயக்குனர் சிவா ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படம் 10 மொழிகளில் வெளியாவதால் எல்லா மொழிக்கும் பொறுத்தமான தலைப்பாக இருக்க இந்த தலைப்பை வைக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

இதுவரை சூர்யா படங்களில் அதிக பட்ஜெட் கொண்ட படமாக இந்த படம் உருவாகி வரும் நிலையில், இந்த படத்தின் டைட்டில் அறிவிப்பு டீசர் வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி சித்திரைத்திருநாளை முன்னிட்டு வெளியாக உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் படட்தின் அறிவிப்போடு விக்ரம் மற்றும் லியோ பட பாணியில் ஒரு அறிமுக ப்ரோமோ வீடியோ ஒன்றும் வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்