தோழிகளை அறைக்கு அழைத்து சென்றார் - அர்ஜூன் மீது துணைநடிகை பகீர் புகார்

Webdunia
திங்கள், 22 அக்டோபர் 2018 (12:19 IST)
நடிகர் அர்ஜீன் மீது பாலியல் தொல்லை தரும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

 
இதனால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆதரவாக மீ டூ இயக்கமும் இணையதளம் வாயிலாக செயல்பட்டு வருகிறது.இதன் தொடர்ச்சிதான் பாடகி சின்மயி கவிஞர் வைரமுத்து மீது பாலியல் புகார் கூறியிருந்தார். அதனையடுத்து நடிகர் ராதாரவி மீதும் ஒரு இணையதள பத்திரிக்கையாளர் குற்றம் சாட்டியிருந்தார். அதேபோல் ஆக்ஸன் கிங் என்று தமிழர்களால் கொண்டாடப்படும் நடிகர் அர்ஜூன் மீது பிரபல நடிகை ஸ்ருதி ஹரிஹரன் என்பவர் பாலியல் குற்றச்சாட்டு கூறியிருந்தார். 
 
நடிகர் அர்ஜூனுடன் 'விஸ்மயா' என்ற திரப்படத்தில் நடித்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்ததாக ஸ்ருதி தெரிவித்திருக்கிறார். ஆனால், நான் எந்த பெண்ணிடமும் தவறாக நடந்தது இல்லை, ஸ்ருதியின் பின்ணணியில் யாரோ இருப்பதாக அர்ஜூன் விளக்கம் அளித்திருக்கிறார்.
 
இந்நிலையில், பெயர் வெளியிட விரும்பாத ஒரு துணை நடிகை கன்னட சேனலில் ஒரு பேட்டியளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
 
15 ஆண்டுகளுக்கு முன்பு ‘அர்ஜூனடு’ என்ற படப்பிடிப்பு மைசூரில் நடந்த போது, நானும், என்னுடன் 20 கல்லூரி மாணவிகளும் படப்பிடிப்பில் கலந்து கொண்டோம். அப்போது, அந்த பெண்களின் தொலைப்பேசி எண்களை அர்ஜூன் கேட்டு வாங்கினார். அதன்பின், அவர் தங்கியுள்ள அறைக்கு வருமாறு என்னிடமும், எனது தோழிகளிடம் கூறினார். பட வாய்ப்புக்காக எனது தோழிகள் அர்ஜூனின் அறைக்கு சென்றனர். அங்கு என்னிடமும், என் தோழிகளிடமும் அர்ஜூன் தவறாக நடந்து கொண்டார். அதேபோல், துணை நடிகை ஏஜெண்டிடம் பணம் கொடுத்து பெண்களை அவரின் அறைக்கு அழைத்து சென்றார்” என அப்பெண் பகீர் பேட்டியளித்துள்ளார்.
 
இந்த பேட்டி அர்ஜூனுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்