மணிரத்னம் இயக்கத்தில் வெளியாகியுள்ள செக்கச் சிவந்த வானம் படத்தை எழுத்தாளர் சாரு நிவேதிதா தாறுமாறாக விமர்சித்துள்ளார்.
நடிகர்கள் விஜய் சேதுபதி, அரவிந்த்சுவாமி, சிம்பு, அருண் விஜய் என மல்டி ஸ்டார்களை கொண்டு மணிரத்னம் இயக்கிய செக்க சிவந்த வானம் நேற்று வெளியானது. நேற்று காலை முதலே சிம்புவின் ரசிகர்கள் திரையரங்கில் குவிந்தனர். பல திரையரங்குகளில் அதிகாலை 5 மணி காட்சிக்கு சிம்புவின் ரசிகர்கள் முண்டியத்து, ஆர்வத்துடன் படம் பார்த்தனர்.
மேலும், பல வருடங்களுக்கு பிறகு மணிரத்னம் ஒரு சிறப்பான படத்தை கொடுத்திருப்பதாகவும், படம் நன்றாக இருப்பதாக பலரும் பாராட்டியிருந்தனர்.
ஆனால், எழுத்தாளர் சாருநிவேதிதா இப்படத்தை கடுமையாக விமர்சித்துள்ளார். தன்னுடைய முகநூல் பக்கத்தில் “செக்கச் சிவந்த வானம் மாதிரி ஒரு மட்டமான படத்தை என் வாழ்நாளில் பார்த்ததில்லை” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதையடுத்து, நீங்கல் நல்லா இல்லை என்று கூறினால் படம் நன்றாக இருக்கும் என சிலர் கிண்டலடித்துள்ளனர். அதேபோல், பிறகேன் முதல் நாள் டிக்கெட் எடுத்து இப்படத்தை பார்த்தீர்கள்? என சிலர் கேள்வியும் எழுப்பியுள்ளனர்.