பேட்ட 11 நாள் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்! ரசிகர்கள் உற்சாகம்

Webdunia
சனி, 26 ஜனவரி 2019 (11:07 IST)
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ,விஜய் சேதுபதி, நவாசுதீன் சித்திக் , திரிஷா, சசிகுமார், பாபி சிம்ஹா உள்பட பலர் நடித்துள்ள படம் பேட்ட.
 
கடந்த ஜனவரி 10ம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இப்படம் வெளியானது. ரஜினிகாந்த் ஸ்டைலிஷாக காணப்பட்டார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு பெற்றது.  படம் வெளியாகி   11 நாள் முடிவில் உலகம் முழுவதும் எவ்வளவு வசூல் ஆகி உள்ளது என்பது குறித்த  பாக்ஸ் ஆபிஸ் விவரம் வெளியாகி உள்ளது. 
அதன்படி 

தமிழ் நாடு 87 கோடி
கேரளா 7.5 கோடி
கர்நாடகா 16.6 கோடி 
ஆந்திரா+தெலுங்கானா  10.5 கோடி
இந்தியாவின் மற்ற பகுதிகள் 4 கோடி
 ஒட்டுமொத்தமாக இந்தியாவில் 125.6 கோடி 
 வெளிநாடுகளில் 69 கோடி

ஒட்டுமொத்தமாக உலக அளவில் 196.6 கோடி ரூபாய் பேட்ட படத்துக்கு 11 நாள் முடிவில் வசூலாகி உள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்