35 வயது தனுஷூக்கு ஜோடியாகும் 40 வயது நடிகை

Webdunia
சனி, 26 ஜனவரி 2019 (09:48 IST)
தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கும் 'அசுரன்' படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்குகிறது. இதனையடுத்து நேற்று இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் வெளியானது
 
இந்த படத்தில் தனுஷுடன் முக்கிய வேடத்தில் பிரபல மலையாள நடிகை மஞ்சுவாரியர் நடிக்கவுள்ளதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இருப்பினும் அவர் தனுஷுக்கு ஜோடியாக நடிக்கின்றாரா? அல்லது வேறு கேரக்டரில் நடிக்கின்றாரா? என்ற கேள்வி எழுந்தது. ஏனெனில் 35 வயது தனுஷூக்கு 40 வயது மஞ்சுவாரியர் நடிக்க வாய்ப்பில்லை என்றே கருதப்பட்டது.
 
ஆனால் இன்று படப்பிடிப்பு தொடங்கவுள்ளதை அடுத்து 'அசுரன்' படக்குழுவினர் ஒரு புதிய ஸ்டில்லை வெளியிட்டுள்ளனர். அதில் தனுஷும், மஞ்சுவாரியரும் ஜோடியாக கணவன், மனைவி போல் இருப்பதால்  இருவரும் ஜோடியாக நடிப்பது தற்போது உறுதியாகியுள்ளது.
 
கலைப்புலி எஸ்.தாணுவின் தயாரிப்பில் ஜிவி பிரகாஷ் இசையில் வேல்ராஜ் ஒளிப்பதிவில் உருவாகும் இந்த படம் இந்த ஆண்டு இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்