ரிலீஸ் குழப்பத்தில் இருந்து தெளிவான முடிவெடுத்த "பிகில்" படக்குழு - ரசிகர்கள் குஷி!

Webdunia
செவ்வாய், 17 செப்டம்பர் 2019 (11:57 IST)
தெறி, மெர்சல் ஆகிய படங்களைத் தொடர்ந்து அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் பிகில். இப்படத்தில், விஜய் அப்பா – மகன் என்று இரு வேடங்களில் நடித்துள்ளார். 


 
பெண்கள் கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். உடன்  யோகி பாபு, கதிர், விவேக், இந்துஜா, ஜாக்கி ஷரூப், டேனியல் பாலாஜி, ஆனந்தராஜ், சவுந்தரராஜா, தேவதர்ஷினி, ரெபா மோகா ஜான், வர்ஷா போலம்மா, ஐஎம் விஜயன் உள்பட பலர் நடித்துள்ளனர். 
 
வருகிற தீபாவளி தினத்தில் வெளியாகவுள்ள இப்படத்திற்காக ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர். ஆனால் தீபாவளி அக்டோபர் 27-ம் தேதி ஞாயிறன்று வருவதால் வெள்ளி, சனி ஆகிய இரண்டு விடுமுறை தினங்களின் வசூலை குறி வைத்து அக்டோபர் 25-ம் தேதியே படத்தை வெளியிட பிகில் படக்குழுவினர் முடிவு செய்து திட்டம் தீட்டியதாக கூறப்படுகிறது. 
 
ஆனால், தமிழ் சினிமாவின் மாஸ் நடிகர் விஜய்யின் படம் தீபாவளி தினத்தில் வெளிவருவதை தான் அவரது ரசிகர்கள் விரும்புகின்றனர். அன்றைய நாளில் திருவிழா போல் பிகில் படத்தை கொண்டாட அவர்கள் முடிவுசெய்துள்ளதால் தீபாவளி தினத்தன்றே படத்தை வெளியிடப்போவதாக  உறுதியாக கூறப்படுகிறது. இதனால் விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சியின் உச்சத்தில் உள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்