விஜய்யின் அடுத்த படத்தில் மூன்று நாயகிகள்: டைட்டில் நாளை அறிவிப்பு

திங்கள், 16 செப்டம்பர் 2019 (20:29 IST)
’அர்ஜுன் ரெட்டி’ என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி அதன் பின்னர் ’நோட்டா’, ’டியர் காம்ரேட்’ உள்ளிட்ட படங்களில் நடித்தவர் பிரபல தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா. இவருடைய ’டியர் காம்ரேட்’ திரைப்படம் சமீபத்தில் 4 மொழிகளில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆகிய நிலையில் தற்போது அவர் தனது ஒன்பதாவது படத்தில் நடித்து வருகிறார் 
 
 
விஜய் தேவர்கொண்டாவுக்கு ஜோடியாக இந்த படத்தில் மூன்று நாயகிகள் நடித்து வருகின்றனர். ஐஸ்வர்யா ராஜேஷ் , ராஷிகன்னா, கேத்ரின் தெரசா ஆகிய மூவரும் இந்த படத்தில் நடித்து வரும் நிலையில் இந்த படத்தின் டைட்டில் நாளை காலை 11 மணிக்கு அறிவிக்கப்பட்ட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர் 
 
 
கிரியேட்டிவ் கமர்ஷியல் என்ற நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வரும் இந்த படம் அதிரடி ஆக்ஷன் படம் மட்டுமின்றி ரொமான்ஸ் கலந்த நகைச்சுவைப் படம் என்றும் கூறப்படுகிறது. விஜய் தேவரகொண்டா ஜோடியாக மூன்று நடிகைகளில் யார் நடித்து வருகிறார் என்பதை படக்குழுவினர் சஸ்பென்ஸாக வைத்துள்ளனர். இருப்பினும் அவருக்கு ஜோடியாக ராஷிகண்ணா நடித்து வருவதாகவும் இருப்பினும் ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் கேதரின் தெரேசா ஆகியோருடன் விஜய்தேவரகொண்டாவிற்கு ரொமான்ஸ் காட்சிகளிள் இருப்பதாகவும் கூறப்படுகிறது 

 
இந்த படத்திற்காக ஆந்திராவில் உள்ள ஸ்டூடியோ ஒன்றில் பல கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்டமான செட் அமைக்கப்பட்டுள்ளதாகவும் இந்த செட்டில் கடந்த சில வாரங்களாக படப்பிடிப்பு நடத்தப்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்