நாதாரி புல்லிங்கோ... ப்ரோமோவுக்காக இப்புடி அடிச்சுக்குறாங்களே!

Webdunia
வியாழன், 8 அக்டோபர் 2020 (12:25 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த இரண்டு நாட்களாகவே அனிதா தொடர்ந்து ப்ரோமோக்களில் இடம்பெற்று விடுகிறார். சுரேஷ் சக்ரவர்த்தியிடம் ஏற்பட்ட வாக்குவாதத்தை தொடர்ந்து அனிதா மக்களால் வெறுக்கப்படும் நபராக பார்க்கப்படுகிறார்.

பெரியவர்களுக்கு மரியாதையை கொடுப்பதில்லை, பேச்சில் அடாவடி, நடத்தை திமிரு என அனிதாவை ஒரு ஹெட்வெயிட் பெண்ணாக இந்த இரண்டு நாளில் சித்தரித்துவிட்டனர் ரசிகர்கள். வெளியில் அவர் எடுத்து வைத்த பெயர் முழுக்க பிக்பாஸ் வீட்டில் நுழைந்த ஜூலி போல் கெடுத்துக்கொள்வார் என்றெல்லாம் பேச்சு அடிபட்டு வருகிறது.

இந்நிலையில் தற்ப்போது வெளியாகியுள்ள இரண்டாவது ப்ரோமோவில் சுரேஷ் சக்ரவர்த்தி சக ஹவுஸ்மேட்ஸ் அனைவர் முன்னிலையில் நின்று மன்னிப்பு கேட்கிறார். ஆனால் அனிதா தொடர்ந்து, சுரேஷிற்கு ப்ரோமோவில் வர ஆசையாக இருக்கிறது என்றும், என்னிடம் வம்பிழுத்தால் அவர் ப்ரோமோவில் வரமுடியும் என நினைத்து இப்படியெல்லாம் நடந்துகொள்வதாக பஞ்சாயத்து பண்ணுகிறார்.

யம்மா அனிதா, எல்லா பிரச்சனையும் நீதானேமா ஆரம்பிச்ச... இப்போ ப்ரோமோல வரணும்னு அவர் நினைக்குறாருனு சொல்றீயேமா என்னம்மா இப்படி‌ பண்றீயேம்மா! அடேய்... விஜய் டிவி... அவங்க ப்ரோமோவுக்காக சண்டை போடுறாங்களோ இல்லையோ ஆனா நீ இந்த சண்டையை திரும்ப திரும்ப ப்ரோமோவா போட்டு சாவடிக்குற.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்