அமீர்கான் மகளின் திறமையை பார்த்தீங்களா...? வேற லெவல் புகைப்படம் இதோ!

Webdunia
வியாழன், 8 அக்டோபர் 2020 (12:05 IST)
பாலிவுட் சினிமாவின் உச்ச நட்சத்திரமான நடிகர் அமீர் கான் இந்திய சினிமாவிலே முக்கிய நடிகராக தென்படுகிறார். வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து விசித்திரமான நடிப்பினை வெளிப்படுத்தி வரும் அமீர்கானுக்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர்.

தற்போது 53 வயதாகும் அமீர்கானுக்கு 1986 ஆம் ஆண்டு ரனா தத்தா என்பவரை திருமணம் செய்துகொண்டார். பின்னர் இவர்களுக்கு ஜுனைத் என்ற மகனும், ஐரா என்ற மகளும் பிறந்தனர். பின்னர் 2002 ஆம் ஆண்டு மனைவி ரனா தத்தாவுடன் ஏற்பட்ட மனக்கசப்பின் காரணத்தால் அவரை விவாகரத்து செய்து பிரிந்துவிட்டார்.

பின்னர் 2005ம் ஆண்டு கிரண் ராவ் என்பவரை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். கிரண் ராவ் அமீர்கான் நடித்த லகான் படத்தில் துணை இயக்குனராக பணியாற்றியது குறிப்பிடத்தக்கது. பின்னர் இவர்கள் இருவருக்கும் அசாத் ராவ் கான் என்ற மகன் பிறந்தார். முதல் மனைவியை பிரிந்தாலும் அமீர்கான் தனது மூன்று குழந்தைகளையும் பாரபட்சமின்றி பாசத்துடன் பார்த்துக்கொள்கிறார்.

பாலிவுட் சினிமாவின் கதாநாயகியாக ஜொலித்து வரும் மகள் ஐரா கான் தற்ப்போது  டாட்டூ கலைஞராக மாறி தனது திறமையை வெளிகாட்டியுள்ளார். இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ள இந்த புகைப்படம்  பாலிவுட் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. ஜரா கான் தமிழில் நடிகர் தனுஷின் அதிரங்கி ரே என்ற படத்தில் அவருக்கு கதாநாயகியாக நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Bucket list item #5: Done. I JUST DID MY FIRST TATTOO! ME. Thanks @nupur_shikhare for trusting me and @ironbuzztattoos for making it possible. Not bad, right? I think I have an alternate career. . . . #firsttime #tattoo #inker #inktober #artist #bucketlist #levelunlocked

A post shared by Ira Khan (@khan.ira) on

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்