பிக்பாஸ் ஜூலி தற்போது கண்ணில் லேசர் அறுவை சிகிச்சை செய்துகொண்டுள்ளார்.
ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது யார்றா இந்த பொன்னு? என ஜூலியைப் பார்த்தவர்கள் அதன் பின் பிக்பாஸில் கலந்துகொண்ட போது என்னடா இந்த பொன்னு? என ஷாக்காகினர். அந்த அளவு கெட்ட பெயரோடு பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார் ஜூலி. அதன் பின் சில திரைப்படங்களில் அவர் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் எதுவும் ரிலிஸாகவில்லை. சில படங்களில் துக்கடா கதாபாத்திரங்களில் நடிக்கும் வாய்ப்புகள் மட்டுமே இப்போது வரைக் கிடைத்துள்ளது. இந்நிலையில் நீண்ட காலமாக சமூகவலைதளங்களில் காணாமல் போன ஜூலி இன்று திடீரென கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதையடுத்து அவர் புகைப்படங்கள் பகிரும்போதெல்லாம் மோசமாக கமெண்ட் செய்துவந்தனர் ரசிகர்கள்.
அதையடுத்து பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் அவர் கலந்துகொண்டு மீண்டும் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆனார். இந்நிலையில் தற்போது மருத்துவமனையில் இருந்து அவர் வெளியிட்டு இருக்கும் ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. கண்பார்வை குறைபாட்டுக்காக செய்யப்படும் லேசர் அறுவை சிகிச்சை செய்துகொண்டதாகவும் அவர் அதில் தெரிவித்துள்ளார்.