”எனக்கு கிடைக்க வேண்டிய மரியாதை கிடைக்கவில்லை”…Comeback பற்றி கிறிஸ் கெய்ல் நம்பிக்கை!

திங்கள், 9 மே 2022 (09:29 IST)
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெய்ல் ஐபிஎல் தொடரில் ஏலத்தில் எடுக்கப்படவில்லை.

ஐபிஎல் தொடரின் 14 ஆண்டுகால சீசன்களில் மிகவும் தாக்கம் செலுத்திய வீரர்களில் கிறிஸ் கெய்லும் ஒருவர். பெங்களூர் அணிக்காக அவர் விளையாடிய ஆண்டுகளில் சிக்ஸர் மழை பொழிந்து ஐபிஎல் போட்டித் தொடரை பொழுதுபோக்கின் உச்சமாக ஆக்கினார். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக அவரின் பேட்டிங்கில் தடுமாற்றம் தெரியவே தொடர்ந்து வாய்ப்புகள் கொடுக்கப்படவில்லை.

இந்நிலையில் 2022 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் ஏலத்தில் அவர் பெயர் இடம்பெறாதது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அவர் இல்லாமல் இந்த சீசன் நடந்துவரும் நிலையில் அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் விளையாடுவேன் என கெய்ல் கூறியுள்ளார்.

சமீபத்தில் அவர் “எனக்கு கிடைக்கவேண்டிய மரியாதையை நான் பெறவில்லை. அவர்களுக்கு நான் தேவைப்படுகிறேன். அடுத்த சீசனில் விளையாடுவேன். பெங்களூர் அல்லது பஞ்சாப் அணிக்காக விளையாடி கோப்பையைப் பெற்றுத் தர விரும்புகிறேன்” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்