சின்னத்திரை நடிகர் சங்கத்திற்கான தேர்தல் ஆகஸ்ட் 10 ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில், நேற்று வேட்பு மனு தாக்கல் தொடங்கியது. முதல் நாளில் நடிகை மீனா குமாரி உள்ளிட்ட சிலர் மனு தாக்கல் செய்தனர். அதேபோல், பிரபல நகைச்சுவை நடிகை ஆர்த்தி கணேஷ் சுயேச்சையாக மனு தாக்கல் செய்திருப்பதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே பதவியில் இருக்கும் சிவன் சீனிவாசன் அணி மீண்டும் போட்டியிடுகிறது. இந்த அணிக்கு எதிராக நடிகர் பரத் தலைமையிலான ஒரு அணியும், நடிகர் தினேஷ் தலைமையிலான மூன்றாவது அணியும் களமிறங்கியுள்ளன. மொத்தம் 23 பதவிகளுக்கு இந்த தேர்தல் நடைபெறுகிறது.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற தினேஷ், போஸ் வெங்கட், பரத், ரவீந்தர், துரைமணி, ராஜூகாந்த், அழகப்பன், மீனாகுமாரி, பிரேமி வெங்கட் உள்ளிட்டோர் போட்டியிட்ட நிலையில், சமீபத்தில் ரெட் கார்டு கொடுக்கப்பட்டதாகக் கூறப்பட்ட நடிகை ரவீனாவும் போட்டியிடுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ரவீணா எப்படி தேர்தலில் போட்டியிடுகிறார் என்பது புரியாத புதிராக உள்ளது. இது தேர்தல் களத்தில் மேலும் சுவாரஸ்யத்தை கூட்டியுள்ளது.