வீட்டை விட்டு வெளியேறப்போகிறார் சனம் ஷெட்டி? - சூடுபிடிக்கும் நாமினேஷன்

Webdunia
திங்கள், 12 அக்டோபர் 2020 (09:33 IST)
பிக்பாஸ் வீட்டில் இன்றைய நாளுக்கான முதல் ப்ரோமோவில் நாமினேஷன் ப்ரோஸெஸ் ஆரம்பமாகியுள்ளது. அதில், கேபிரியல்லா, ரேகா , சனம் ஷெட்டி ,சம்யுக்தா, ஆஜித்,  ரம்யா , ஷிவானி உள்ளிட்டோரில் வீட்டில் இருக்கும் போட்டியாளர்கள் பெரும்பாலானோர் சனம் ஷெட்டியை தான் நாமினேட் செய்துள்ளனர். அத்துடன் மக்களுக்கும் சனம் ஷெட்டியின் நடவடிக்கைகள் சுத்தமாக பிடிக்கவில்லை.

ஆரம்பத்தில் எல்லோரும் ரேகா தான் வீட்டை விட்டு முதல் ஆளாக வெளியேறுவார் என எதிர்பார்த்தோம். ஆனால், தற்ப்போது நாமினேஷனில் ரேகாவின் பெயர் அடிபடவேயில்லை. அவர் எப்படியே இந்த வராம் தப்பித்துவிட்டார். அதுசரி...  பிக்பாஸ் யாரை வெளியேற்ற வேண்டும் என்று முன்பே முடிவு செய்து வைத்து விடுவார். ஓட்டெடுப்பு எல்லாம் வெறும் கண் துடைப்பு..

சனம் ஷெட்டிக்கு பிறகு வீட்டில் உள்ள போட்டியாளர்கள் அஜித் , ஷிவானியை குறிப்பிட்டு இருவரும் யாரிடமும் மிங்கில் ஆகவில்லை என ரீசன் கூறியுள்ளனர். ஏன்டா ஷிவானி தான் மிங்கில் ஆக டைம் ஆகுன்னு சொல்றாங்கள்ள அப்புறம் பேச மாற்றா பேச மாற்றான்னு சொல்லிட்டு இருக்கீங்க பாவம் 20வயசு புள்ள எப்படி சீக்கிரம் மிங்கில் ஆகும்.  

ஷிவானி மிங்கில் ஆகலன்னு சொல்றீங்களே உங்கள்ள எத்தனை பேரு ஷிவானி ஆஜீத் கிட்ட மிங்கில் ஆக ட்ரை பண்ணீங்க அதை சொல்லுங்க... எனக்கு தெரிஞ்சி ஆஜித் , ஷிவானி ரெண்டு பேரும் எல்லாருக்கும் ஈசி டார்கெட் போன்று சும்மா அவங்களுக்கே ஹார்ட்  பிரேக் குடுக்குறாங்க. அவங்க ரெண்டு பேரும் வயசுல சின்னவங்க,  போக போக தான் பழகுவாங்க அத கூட புரிஞ்சிக்காம பாவம் அவங்க ரெண்டு பேரும் டார்கெட் பண்ணிட்டே இருக்கீங்க.  இப்ப நாமினேட் பண்ண வேண்டியது அப்பறம் போகும் போது கண்ணீர் விட்டு அழவேண்டியது.  சனம், பொட்டி படுக்கையோடு ரெடியா இரும்மா...

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்