அரவிந்த் சாமி, அமலா பால் படமும் பொங்கலுக்கு ரிலீஸாகிறதாம்...

Webdunia
செவ்வாய், 19 டிசம்பர் 2017 (13:23 IST)
அரவிந்த் சாமி, அமலா பால் நடித்துள்ள ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ படமும் பொங்கலுக்கு ரிலீஸாகும் எனத் தெரிகிறது.



சித்திக் இயக்கத்தில், அரவிந்த் சாமி - அமலா பால் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’. மலையாளத்தில் மம்மூட்டி - நயன்தாராவை வைத்து தான் இயக்கிய ‘பாஸ்கர் த ராஸ்கல்’ படத்தை, தமிழில் ரீமேக் செய்துள்ளார் சித்திக். ரமேஷ் கண்ணா இந்தப் படத்துக்கு வசனம் எழுதியிருப்பதோடு, முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

இந்தப் படத்தை, பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர்கள் முடிவெடுத்துள்ளனர் என தகவல் கிடைத்துள்ளது. ஏற்கெனவே சூர்யாவின் ‘தானா சேர்ந்த கூட்டம்’, விக்ரமின் ‘ஸ்கெட்ச்’, சுந்தர்.சி.யின் ‘கலகலப்பு 2’, பிரபுதேவாவின் ‘குலேபகாவலி’, சண்முகபாண்டியனின் ‘மதுர வீரன்’ ஆகிய படங்கள் பொங்கலுக்கு ரிலீஸாவதாக அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், ‘தானா சேர்ந்த கூட்டம்’ மற்றும் ‘ஸ்கெட்ச்’ படங்களுக்கு குறைந்தது 70% தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுவிடும். காரணம், இரண்டு படங்களையும் பெரிய தயாரிப்பாளர்கள் தயாரித்துள்ளனர். அப்படியிருக்கும்போது ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ படத்துக்கு எப்படி தியேட்டர் கிடைக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்