என் தொப்புள் பெரிய விசயமாக பேசப்படுகிறது; அமலா பால்

திங்கள், 27 நவம்பர் 2017 (17:53 IST)
நாம் 2017ஆம் ஆண்டில் இருக்கும்போதிலும் என் தொப்புள் தெரிவது பெரிதாக பேசப்படுகிறது என அமலா பால் கூறியுள்ளார்.


 
சுசி கணேசன் இயக்கத்தில் உருவாகியுள்ள திருட்டு பயலே இரண்டாம் பாகத்தில் அமலா பால், பிரசன்னா, பாபி சிம்ஹா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர், ட்ரெய்லர் என அனைத்தும் பெரிதாக பேசப்பட்டது. 
 
ஆங்கில பத்திரிகை ஒன்று பேட்டியளித்த அமலா பால் கூறியதாவது:-
 
படத்தில் என் தொப்புள் தெரிவது இவ்வளவு பெரிய விஷியமாக பேசப்படும் என நினைக்கவில்லை. நாம் 2017ஆம் ஆண்டில் வாழ்கிறோம். இருப்பினும் என் தொப்புள் தெரிவது பெரிய விசயமாக பார்க்கப்படுகிறது. சுசு கணேசன் இயக்கத்தில் நடித்ததில் மிகவும் மகிழ்ச்சி. இந்த படத்தில் நான் வித்தியாசமாக நடித்துள்ளேன். படத்தின் கதையும், கதாபாத்திரமும் எனக்கு மிகவும் பிடித்திருந்தது என்றார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்